அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 3
   நள்ளிரவு தாண்டியிருந்தது, taxi இல் இருந்து இறங்கி காசைக் கொடுத்து விட்டு வீட்டை நோக்கி நகர்ந்தான். அவனுடைய நடை ஒரு குடிகாரனுடைய நடையைப் போல இருந்தது, அவனுடைய தூக்க வெறி அவனுடைய நடையை அப்படி மாற்றி இருந்தது.

     வீட்டை அடைந்து பெல் ஐ அழுத்தினான், கதவு திறக்கப்பட்டது. உள்ளே தனது அறைக்குள் போய் பாக்கெட்டில் இருந்து அனைத்தையும் மேசை மீது வைத்தான். தண்ணீர் வைக்கப்பட்டிருந்தது, அதைக் கொஞ்சம் குடித்து விட்டு. Tshirt ஐ கலட்டி மேசை மீது எறிந்துவிட்டு, pant ஐயும் மாற்றி விட்டு washroom இற்கு போய் bodywash பன்னி விட்டு வெளியே வந்து கட்டிலில் விழுந்தான். அவனுடைய கன்கள் நெருப்பை போல சிவந்திருந்தது.

    கண்ணை மூடிக்கொண்டான். அவனுக்கு தூக்கம் வரவில்லை, வந்த calls என்னவாக இருக்கும் என்று யோசித்த வண்ணம் எழுந்து phone ஐ எடுத்தான். Twitter இற்குள் போய் அந்த caller சொன்ன பெயரை டைப் செய்ய முனைந்தான், ஆனால் அந்தப் பெயர் அவனுக்கு நினைவில் இருக்கவில்லை. பலமுறை யோசித்தும் வரவே இல்லை. ஏதோ "jaim" என்பது மட்டும் நினைவிருந்தது அவனுக்கு.

     அதை வைத்து என்னதான் பன்ன முடியும். “என்னடா இது” என்று கூறிக்கொண்டே மீண்டும் கட்டிலில் பிரண்டான். அந்தக் கட்டிலும் மற்ற அனைத்துமே அவனுக்காக மிக அழகாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

     மீண்டும் Phone ஐ ஏதோ பார்த்துக் கொண்டிருந்தான், அவனை அறியாமலேயே தூக்கம் அவனை ஆட்கொண்டது.
© Safras Hassan,
книга «மீண்டும் ஒரு டீன் ஏஜ் - பாகம் - 1».
அத்தியாயம் 4
Коментарі