அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 2
   2018 ஜூன் இறுதிகளில் ஒரு சனிக்கிழமை இரவு, 11 மணியிருக்கும். அந்தச் சாலையில் அவன் தனியே நடந்து கொண்டிருந்தான்.
அந்த மங்கலான சாலையோர விளக்குகள் கூட அவனின் கண்களை கூச வைத்தது, தூக்க மயக்கத்தில் நடப்பவன் போல நடந்தான். ஒரு கையால் கன்னை கசக்கிக் கொண்டே வழமையாக காப்பி குடிக்கும் கடையை நோக்கி வேகமாக நடந்தான். அந்தக் கடையில் காப்பி குடிப்பதற்காகவே பல இரவுகள் அவன் தனியாக வருவதன்டு.
அப்போது ஒரு போன் கோல், அவனுடைய போன் ரிங் பன்னியது. “இந்த டைம் யாருடா இது” என்று கூறிக்கொண்டே போன் ஐ பாக்கெட்டில் இருந்து எடுத்தான்.

        அந்த phone call அவனின் வாழ்க்கையில் இப்படி ஒரு மிகப்பெரிய மாற்றத்தை உன்டுபன்னும் என்பதை அவன் கனவில் கூட நினைத்திருக்க மாட்டன் . இவ்வளவு ரத்தம் சிந்த வரும் என்பதையும், கண்ணீரையும் கவலைகயையும் வலிகளையும் வாரி இரைக்கும் என்பதையும் அவன் ஒரு சிரிதும் நினைத்திருக்கவில்லை.


     அந்த phone call, ஒரு புதிய நம்பராக இருந்ததால் யாராக இருக்கும் என்று என்ணிக்கொண்டே phone ஐ answer பண்ணினான்.
Caller : " ஹலோ, மிஸ்டர் London"
அவன் " ஹலோ, who is this??"
Caller  " London, நீங்க யாரு , ஓங்க ஹிஸ்டரி, என்ன பண்றீங்க எல்லாமே எனக்கு நல்ல தெரியும்"
அவன்  " யாரு இது? "
Caller : " Mr.London, நீங்க twitter இல் Jamie930 என்கிற ஒரு account ஐ follow பண்றீங்க, உங்களுக்கும் அந்த girl கும் என்ன தொடர்பு "
அவன் : "who is this" என்று மீண்டும் கேட்டன்.
அதற்கு அந்த caller, சொன்னதையே திருப்பவும் சொன்னான். "என்னடா இது புது பிரச்சனை" என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டு போன் ஐ கட் பண்ணினான்.

         இந்த சம்பாசனை நடந்து முடியும் போது காப்பி குடிக்கும் ஹோட்டல் அருகே வந்திருந்தான், மெதுவாக உள்ளே சென்றான். முன்னாலிருந்த கதிரையில் அமர்ந்து கொண்டு. "மாமா ஒரு நல்ல coffee தாங்க " என்று கூறிக்கொண்டே போன் ஐ பார்த்தான். 11.47PM. கண்ணை ஒருமுறை கசக்கிக்கொண்டு போன் ஐ மேசையில் வைத்தான். மீண்டும் போன் ரிங் பண்ணியது, அதே number. Answer panninaan.
Caller  "London, சொல்றதுக்கு பதில் சொல்லுங்க London"
அவன் : "யாருடா நீ, நீ சொல்ற யாரையுமே எனக்கு தெரியாது" என்று சொல்லி விட்டு போன் ஐ கட் பண்ணினான்.

Coffee மேசைக்கு வந்தது, அதன் மனம் அவனை கொஞ்சம் உற்சாகப்படுத்தியது போலும், கொஞ்சம் கதிரையில் adjust பண்ணி அமர்ந்தான்.

      Phone ஐ மேசையில் வைத்து விட்டு coffee ஐ எடுத்து வாயில் வைத்தான். மீண்டும் call. இப்போது வேறு ஒரு நம்பர். Answer பன்னி காதில் வைத்தான். “Mr.London .......” என்று துவங்கி முன்பு வந்த call இல் சொன்ன அனைத்தையும் அந்த caller உம் சொன்னான். கட் பண்ணி விட்டு coffee ஐக் குடித்தான். Coffee நன்றாக இருந்ததால், மெதுவாக குடித்தான். குடித்து முடிப்பதற்குள் மூன்று கால், இரண்டு caller.

     எழுந்து பணத்தை கெடுத்து விட்டு வெளியேரினான். மொத்தத்தில் 6 calls , 4 callers. என்னவாக இருக்கும் என்று பலவாறாக யோசனை செய்ததில் ஒன்றும் புரியவில்லை அவனுக்கு. பாதையில் வந்த ஒரு taxi ஐ நிறுத்தி "Collage Street, No-28 கு போங்க" என்று கூறிக்கொண்டே அதில் ஏறினான்.
© Safras Hassan,
книга «மீண்டும் ஒரு டீன் ஏஜ் - பாகம் - 1».
அத்தியாயம் 3
Коментарі